Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கு எதிராக இப்படியும் ஒரு சடங்கு :இனிமேலும் அரங்கேறலாமா?

பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. அதில் பெண்கள் பிறப்புறுப்பை சிதைக்கும் சடங்கும் ஒன்று. என்ன ஏதுவென்று அறியாத வயதில் கிட்டத்தட்ட 6 மற்றும் 7வது வயதிலேயே ஆப்ரிக்க நாடுகளில் இது போன்று பெண்கள் பிறப்புறுப்பை சிதைக்கும் சடங்கினை நடத்துகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் மத நம்பிக்கை காரணமாக இத்தகைய கொடூர செயல்களில அவர்களது குடும்பத்தினரே ஈடுபடுகின்றனர்.

அந்த குடும்பத்தில் உள்ள மூத்த பெண் உறுப்பினர் ஒருவரே பிளேடு, கத்தி போன்றவற்றால் துடிக்க துடிக்க இத்தகைய கொடூர காரியத்தை அரங்கேற்றுகின்றனர். அதாவது இந்த வயதில் சிறுமிகளின் பிறப்புறுப்புகளின் இருக்கும் சதை பகுதிகளை வெட்டி எடுத்து விடுகின்றனர். பின்னர் சிறுநீர் கழிக்க, மாதவிடாய் கழிவுகள் மட்டும் வெளியேற சிறு துவாரம் மட்டும் இருக்கும்.

அத்துடன் பாதுகாப்பற்ற  முறையாயில் செய்யப்படும் இந்த வெட்டி எடுக்கும் முறையால் அந்த சிறுமிகள் படும் பாட்டினை சொல்ல முடியாது. பல சிறுமிகள் தொற்று நோய் ஏற்பட்டு, இறப்பதும் உண்டு. ஆனால் அதனையெல்லாம் யாரும் சட்டை செய்வதில்லை. அதுமட்டுமல்ல, உடல் உறவின் போதும், குழந்தை பேறின் போதும் இந்த  பெண்கள் அனுபவிக்கும் கொடுமையை சொல்ல வார்த்தைகள் இல்லை.

கடந்த 2014-ம் ஆண்டு மட்டும் 7 கோடி சிறுமிகளுக்கு பிறப்புறுப்பு சிதைப்பு செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு சொல்கிறது. உலகம் முழுக்க 20 கோடி பெண்களுக்கு இது போன்று பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமைய நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் எந்த பயனும் இல்லையென்றே தெரிய வருகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருப்பதாகத் தெரிகிறது. 'யுனிசெப் ' அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் எகிப்து, இந்தோனேஷியா, எத்தியோப்பியா நாடுகளில் உள்ளனர். அதுபோல் வறுமையில் உழலும் சோமாலியாவில் பெண்கள் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.

இந்தியாவிலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. குஜராத்தில் ஒரு மதப்பிரிவினர் ரகசியமாக இது போன்ற காரியத்தில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இந்த பிரிவை சேர்ந்த பெண் ஒருவர்,  இது தொடர்பாக தான் சார்ந்த மதத் தலைவருக்கு கடிதம் எழுதியது இணையங்களில் வெளியானது. அப்போதுதான் இந்தியாவிலும் இந்த கொடுமை அரங்கேறுவது வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இன்று பிப்ரவரி 6- பெண்கள் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாள்!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ