Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காற்றுப்பை கோளாறு; 50 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது அமெரிக்க நிறுவனம்!

யணிகள் பாதுகாப்புக்காக சொகுசு வாகனங்களில் பொருத்தப்பட்ட காற்றுப் பைகளில் ஏற்பட்ட கோளாறைத் தொடர்ந்து,  அதை சரிசெய்து தருவதற்காக உலகம் முழுவதும் 50 லட்சம் கார்களை திரும்பப்பெற அமெரிக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

அமெரிக்காவில் இயங்கிவரும் கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம்,  சொகுசு வாகனங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப்படும் காற்றுப் பைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் காற்றுப் பைகள் உலகம் முழுவதும் உள்ள  பல்வேறு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, அந்த காற்றுப் பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அளித்த ஆவணங்கள், தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  “ கடந்த 2006-ம் ஆண்டுக்கு பிறகு தயாரித்து விற்பனை செய்யப்பட்ட காற்றுப்பை கட்டுப்பாட்டு கணினியில் ஈரப்பதம் உள்ளே புகுவதற்கு வழி இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், காற்றுப்பை விரியாமல், விபத்தின்போது ஓட்டுநருக்குப் பாதுகாப்பு குறைய வாய்ப்புள்ளது. எனவே, இதனை எந்தவித கட்டணமுமின்றி மாற்றிதரத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக, 2006-ம் ஆண்டுக்குப் பிறகு விற்பனை செய்த கார்களை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பிரச்னைக்காக, ஹோண்டா, ஃபியட் கிரைஸ்லர், வோக்ஸ்வேகன் மற்றும் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 20 லட்சம் வாகனங்கள் இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கான்டினென்டல் நிறுவனம் அந்த அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close