Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முத்தத்துக்கு தடா.. எங்கே... ஏன்?

பிரேசில்: எச்சில் மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவலாம் என்பதால், முத்தமிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரேசில் அரசு எச்சரித்து உள்ளது.

டெங்கு, சிக்கன் குனியா போல் கொசுக்களால் பரவி வரும் ஜிகா நோய், கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிக்கிறது. இதனால், ஜிகா நோய் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், உறவு மூலமாகவும் ஜிகா நோய் பரவுவதாகவும் சமீபத்தில் கண்டறியப்பட்டு உள்ளது.

 

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஆசியா கண்டத்துக்கும் இந்நோய் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. சுமார் 40 லட்சம் மக்களை இந்நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், கொசுக்கள் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் ஜிகா நோய் செல்லக்கூடும்.

அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் ஜிகா பாதித்த நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் பயணிகளுக்கான புதிய மருத்துவ எச்சரிக்கையை அமெரிக்க சுகாதாரத்துறையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஜிகா நோய்த் தொற்று உள்ளவர்களின் எச்சில் மற்றும் சிறுநீரகம் மூலமாகவும் இந்நோய் மற்றவர்களுக்கு வேகமாக பரவக்கூடும் என்று நேற்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, வெளிநபர்களை முத்தமிடுவதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரேசில் அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ