Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குளியலறை கண்ணாடியிலும் இனி 'கூகுள்' பண்ணலாம்... அமெரிக்கரின் அசத்தல் ஆன்ட்ராய்ட்!

நியூயார்க்: சினிமாக்களில் வருவது போல குளியலறை கண்ணாடியிலும் ஆன்ராய்ட் தொழில் நுட்பத்தை உருவாக்கி  கூகுள் என்ஜினியர் ஒருவர் அமெரிக்காவில் சாதனை படைத்துள்ளார்.   

இந்த சாதனை குறித்து டெக்டைம்ஸ்  என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், " கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் மேக்ஸ் பிரவுன் என்பவர்,  பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, குளியலறை கண்ணாடியில் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தை பதிவேற்றி இயக்கி, வெற்றி பெற்றுள்ளார்.

இதில், சாதாரண கண்ணாடியை ஸ்மார்ட் கண்ணாடியாக மாற்ற,  டூ வே மிரர் என்ற கண்ணாடியை பயன்படுத்தியிருக்கிறார் பிரவுன்.

அதுதவிர, கன்ட்ரோலர் போர்டு, டிஸ்பிளே பேனல், எலக்ட்ரானிக் உதிரிப்பாகங்கள், அலங்கார பொருட்களை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் கண்ணாடி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், வானிலை குறித்த அப்டேட்கள், குரல் மூலமாக கூகுள் இணையதளத்தில் தேடும் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில், இன்னும் பல நவீன வசதிகளை இணைக்கவும் பிரவுன் முடிவு செய்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஸ்மார்ட் தொழில் நுட்பம் என்பதால்,  அனைவரையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ