Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதன்முறையாக ஜிகா வைரஸ்-க்கு கொலம்பியாவில் 3 பேர் பலி!

சென்னை: ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி முதன்முதலாக கொலம்பியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஜிகா வைரஸ் தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நோய், கர்ப்பிணிகளை முதல் 3 மாத கர்ப்ப காலத்தில் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தையின் தலை மிகவும் சிறிதாக இருக்கும். மூளையில் பாதிப்பு ஏற்படும். பிற பிறவிக்குறைகளுக்கும் வாய்ப்பு உண்டு.

பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3,500 குழந்தைகள் இதுபோல் பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

‘ஜிகா’ வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது.

இந்த நிலையில், முதன் முறையாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 3 பேர் பலியாகி உள்ளனர் என்று கொலம்பியாவின் தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜிகா வைரஸ் தாக்குதல் காரணமாக முதன் முதலில் பலியானவர்கள் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close