Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உளவு விமானங்களை வேட்டையாட வருகிறது கழுகுப்படை! (மிரள வைக்கும் வீடியோ)

கிரிமினல்கள் மற்றும் தீவிரவாதிகள் சட்டவிரோதமாக பறக்கவிடும் ஆளில்லா உளவு விமானங்களை வேட்டையாடுவதற்கு தேர்ச்சி பெற்ற கழுகு கூட்டங்களை வானில் களமிறக்குவது தொடர்பாக அமெரிக்க காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த திட்டம் ஹாலந்து நாட்டில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள நிலையில்,  கம்பீரமான கழுகின் உருவத்தை அரசு முத்திரையில் பயன்படுத்திவரும் அமெரிக்காவும் இந்த கழுகுப்படையை உருவாக்க தீர்மானித்துள்ளது.

வானத்தின் அரசனாக வர்ணிக்கப்படும் கழுகுகள்,  படுவேகமாக பறந்துப் பாய்ந்து,  மிகுந்த பலத்துடன் தனது இரையை வானில் தாக்கிக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை.



 

எனவே, அவற்றுக்கு உரிய பயிற்சி அளித்து கிரிமினல்களின் கண்காணிப்பு விமானங்களை வேட்டையாடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ