Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மீனவர் படகுகளை திருப்பி கொடுக்கமாட்டோம்: இலங்கை அடாவடி!

கொழும்பு: பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர் படகுகளை ஒருபோதும் திருப்பி கொடுக்கமாட்டோம் என்று இலங்கை அமைச்சர் சமரவீரா தெரிவித்து உள்ளார்.

இலங்கை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற மீன் பண்ணை தொடக்க விழாவில்,  அந்நாட்டு மீன் வளத்துறை அமைச்சர் சமரவீரா கலந்து கொண்டு பேசும்போது, ''இந்திய மீனவர்களால் இலங்கை உள்நாட்டின் மீன் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் சுற்று சூழலுக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றனர். அவர்களுடைய அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது சம்பந்தமாக இந்தியாவில் இருந்து வந்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்து கூறியிருக்கிறோம். அவர் இது பற்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கும்.

மேலும், எங்களுடைய இயற்கை வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் ஒருபோதும் அவர்களிடம் திருப்பி கொடுக்கமாட்டோம்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close