Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடுவானில் கோளாறு... விமானத்தின் போக்கில் சென்று உயிர் தப்பிய விமானி! (ஆச்சர்ய வீடியோ)

பிரான்சில் சிறிய ரக விமானத்தில் பயணித்த போது, என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம்,  வயல் வெளியில் தரையிறங்கியதோடு, விமானி காயமின்றி உயிர் தப்பினார்.

40 வயதுடைய விமானி ஒருவர், சிறிய ரக விமானம் ஒன்றினை, Seine et Marne என்ற பிரெஞ்சு துறையில் இருந்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால்,  விமானம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.


விமானத்தின் போக்கில் சென்ற விமானியும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில், மொவ்ரக்ஸ் என்ற பகுதியில் உள்ள வயல் வெளியில் தரையிறங்கியது. ஆனால், காயங்கள் இன்றி விமானி தப்பியுள்ளார். புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ