Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்றாம் உலகப் போர் பீதியில் சர்வதேச நாடுகள்!

மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் மனித குலமே அழிந்து விடும் என்று ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் செர்ஜி நாரிஷின் கடந்த ஆண்டு எச்சரித்தார். ஆனால் மூன்றாம் உலகப் போர் எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உலக நாடுகளை பீதியடையச் செய்துள்ளது.

ஏனெனில் உலகப் போர்கள் சாதாரணமாக வந்து போகிறவை அல்ல. அவை மனித வாழ்க்கையில் ஏற்படுத்தாத அக்கப்போரே கிடையாது என்று சொல்லலாம். இதுவரை நடந்துள்ள இரண்டு உலகப் போர்களும் இந்த உலகையே தலைகீழாக திருப்பிப் போட்டிருக்கிறது.

உலகப் போர்களின் விளைவாக நிகழ்ந்த நல்லது கெட்டது எல்லாமே எல்லோருடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயுதங்களும், தொழில்நுட்பமும், போக்குவரத்தும் கடந்த நூறாண்டுகளில் பெருமளவு வளர்ந்ததற்கு முக்கிய காரணமே உலகப் போர்கள்தான் என்றால் மிகையில்லை.

மூன்றாவது உலகப் போரா?

நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களுக்குமே ஏதோ ஒரு நாடுதான் தொடக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அனைத்து நாடுகளுமே தனக்கான சந்தையை உலக அளவில் உருவாக்குவதில்தான் தீவிரமாக இருந்தன.



இதன் காரணமாகவே எந்தவொரு நாடும்,  மற்ற நாடுகளுடன் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ,  பகையை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் பெரும்பாலான நாடுகள் முரண்டு பிடிப்பதையும், பகையை வளர்ப்பதையும் விடவில்லை.

எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் ஒவ்வொரு நாடும்,  தங்கள் ஆயுத பலத்தை வளர்ப்பதில் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்து வருகின்றன.

அமெரிக்காவும் வட கொரியாவும்...

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு மிக வலிமையான அமெரிக்கா,  தன்னுடைய ஆயுத பலத்தை கடந்த 70 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துக் கொண்டுள்ளது. பொருளாதார ரீதியிலும், ஆயுத பலத்திலும் வலிமையுடன் இருக்கும் அமெரிக்கா,  எந்தவொரு நாட்டிலும் புகுந்து சாம்ராஜ்யம் செய்வதற்கான சக்தியைக் கொண்டுள்ளது. ஆனால் இன்று பணமும் பொருளாதாரமும் மட்டுமே சக்தியின் அளவை நிர்ணயிக்கிறது என்பதால்,  எந்த நாட்டுடனும் வெளிப்படையான விரோதத்தை அது வளர்த்துக்கொள்ளவில்லை.


ஆனால் வட கொரியா,  அமெரிக்காவை மட்டுமில்லாமல் பல வளர்ந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில்,  தனது ஆயுத பலத்தை அவ்வப்போது பகிரங்கமாகச் சொல்லி வருகிறது. புதிய அணு ஆயுதங்களையும், செயற்கைக் கோள்கைகளையும் உருவாக்கி சோதனை செய்து வருகிறது.

இதில் என்ன பிரச்னை? இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களுடைய சக்திக்கு ஏற்ப ஆயுதங்களைத் தயார் செய்து வருவது வழக்கமாகிவிட்ட விஷயம்தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை, அணு ஆயுதங்களை விட மோசமானது வாயில் வரும் வார்த்தைகள்தான்.

வட கொரியாவைப் பொறுத்தவரை அதனிடம் ஹைட்ரஜன் குண்டு, சக்தி வாய்ந்த ஏவுகணைகள் ஆகியவை இருக்கிறதா இல்லையா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும்,  'அமெரிக்காவை அழிக்கும் சக்தி எங்களிடம் இருக்கிறது, எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது'  என்ற அளவுக்கு தொடர்ந்து சவால் விட்டுக்கொண்டிருக்கிறது அந்நாடு. இதனால் அடிக்கடி அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் முட்டிக்கொண்டிருக்கிறது.



போர் நடந்தால் என்ன?

இது போன்ற நிகழ்வுகள் ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் பெரும்பாலான நாடுகளிடம் அணு ஆயுதங்களும், சக்தி வாய்ந்த குண்டுகளும் உள்ளன. நண்பனுக்குப் பகைவன் தனக்கும் பகைவன் என்று நாடுகள் அணி திரண்டால்,  மீண்டும் ஒரு உலகப் போர் நடப்பதற்கு அதிக நேரமாகாது.

அப்படி நடந்தால் ஒட்டுமொத்தமாக உலகமே அழிந்துவிடும் சூழல் மிக எளிதில் உருவாகிவிடும். மனித குலமே இல்லாத நிலை ஏற்படும். ஹிரோஷிமா-நாகசாகியின் கதை ட்ரெய்லர்தான்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close