Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா காலமானார்!

காத்மாண்டு: நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும், நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சுஷில் கொய்ராலா இன்று காலமானார்.

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டு சுமார் 16 ஆண்டுகாலம் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தார். 1954-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வந்த கொய்ராலா, விமானத்தை கடத்தியது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் இந்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டதில் முக்கிய பங்காற்றியவர் கொய்ராலா. அவரது ஆட்சியின்போது கடந்த நவம்பர் 20-ம் தேதி, புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் கே.பி.ஒலியிடம் தோல்வியடைந்தார் கொய்ராலா.

நாக்கில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதான கொய்ராலா, அதன்பின் நாடு திரும்பி தலைநகர் காத்மாண்டுவின் புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தா. இந்நிலையில், நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மூச்சுவிடுவதில் சிரமப்பட்டு வந்த கொய்ராலா, இன்று அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார்.

நேபாள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுள்ள அவரது உடலுக்கு தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில், ''மதிப்புமிக்க நண்பரை இந்தியா இழந்துவிட்டது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ