Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னது... ஒபாமாவுக்கே வைஃபை கிடைக்கலையா? (வீடியோவை பாருங்கள் தெரியும்)

வெள்ளை மாளிகையில் வைஃபை வசதி சரியான முறையில் கிடைப்பதில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் Super Bowl என்ற நிகழ்ச்சியில்,  தனது மனைவியுடன் கலந்து கொண்ட ஒபாமாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில், ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் வைஃபை வசதி சரியான முறையில் கிடைப்பதில்லை என்று ஒபாமா கூறியுள்ளார்,

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இணையதொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்திருந்தாலும், பல இடங்களில் வைஃபை வசதி கிடைப்பதில்லை. அந்த பிரச்னையால் நானும், பாதிக்கப்பட்டுள்ளேன். குறிப்பாக எனது மகள்களான சாஷா மற்றும் மாலியா ஆகிய இருவரும் வைஃபை வசதி கிடைக்கவில்லை என்றால் எரிச்சலடைவார்கள். வெள்ளை மாளிகை பழைய காலத்து கட்டடம் என்பதால், சரியான முறையில் வைஃபை அங்கு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ