Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இடதுபக்கம் ஆறு... வலது பக்கம் அடர்ந்த காடு... நேருக்கு நேர் மோதிய ரயில்களால் நடந்த விபரீதம்! (வீடியோ)

ஜெர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்துள்ளனர்.
 

ஜெர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள பட் அபிலிங் என்ற இடத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் ரயில் ஒன்று தடம்புரண்டதால் ஏராளமான பயணிகள் ஈடுபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் ரயிலில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 150 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.



 

விபத்து நடந்த பகுதியில் இடது பக்கம் ஆறு இருக்கிறது. வலது பக்கம் அடர்ந்த காடு இருப்பதால் மீட்பு பணியில் சிரமம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்