Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறந்த குழந்தை இறுதி சடங்கில் உயிர் பிழைத்த அதிசயம்!

பெய்ஜிங்: சீனாவில் இறந்த குழந்தை ஒன்று, இறுதி சடங்கின்போது உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்து உள்ளது.

சீன நாட்டின் ஷைஜியங் மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை,  குறை பிரசவத்தில் பிறந்தது. அதனால், அந்தக் குழந்தையை மருத்துவர்கள் இன்குபெட்டர் கருவியில் 23 நாட்கள் வைத்து பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

அதன்பின் அக்குழந்தை சிறிது உடல் நலம் தேறியதும், மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து பெற்றோர் அக்குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்கின்றனர்

இந்நிலையில், அந்த குழந்தையின் இதய துடிப்பு திடீர் என்று நின்றதால் அக்குழந்தை இறந்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அக்குழந்தையின் உடல் துணிகளால் சுற்றப்பட்டு, பாதுகாப்பாக மருத்துவமனையில் உள்ள  பிணவறையில் சுமார் 15 மணி நேரம் வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.

அதன் பின்னர் பெற்றோர்,  அக்குழந்தையின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்று,  இறுதி சடங்குகளை செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்த குழந்தையின் உடலை புதைப்பதற்கு எடுத்து சென்றபோது, குழந்தையின் உடலில் அசைவு தெரிந்திருக்கிறது. அத்துடன், அக்குழந்தை முணங்கியும் இருக்கிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஆச்சர்யத்துடன் அக்குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு, அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு உயிர் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பெற்றோர், அக்குழந்தையை வாரி அணைத்து உச்சி முகர்ந்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ