Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்தை புரட்டி போட்ட 'இமோஜின்' புயல் (வீடியோ)

இங்கிலாந்தை தாக்கிய இமோஜின் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிபோயுள்ளனர்.

இங்கிலாந்தின் தென் பகுதியில் திங்களன்று மணிக்கு 100 மைல் வேகத்தில் இமோஜின் புயல் தாக்கியது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயலில் காரணமாக 60 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பியது.

மேலும் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் 50க்கு மேற்பட்ட வெள்ள அபாயமும் 180க்கும் மேற்பட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 96 மைல் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் மின்கம்பங்கள் மற்றும் சாலையோர மரங்கள் சாய்ந்து விழுந்தன.கார்கள் மண்ணில் புதைந்து போயின.

சில பகுதிகளில் வீடுகளின் கூரை காற்றில் பெயர்ந்து போனாது. இதனால் கார்ன்வால் மற்றும் டெவன் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு நடவடிக்கைகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது.


தற்போது புயலின் வேகம் குறைந்து இருந்தாலும் வேல்ஸ் பகுதியில் பலத்த காற்றும் வடபகுதியில் கடும் பனிப்பொலிவும் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ