Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெக்சிக்கோ சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: 52 பேர் பலி!

மான்டெர்ரி: மெக்சிக்கோவில் உள்ள ஒரு சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில 52 பேர் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோவின் மான்டெர்ரி நகரில் உள்ள சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு இடையே நேற்று (11-ம் தேதி) பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில், கைதிகள் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கியதுடன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளையும் பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 52 பேர் பலியாகியுள்ளதாகவும், 12க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், கைதிகள் சிலர் சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதே மோதலுக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ