Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் உயிரிழப்பு!

வாஷிங்டன்: காற்று மாசுபாடு காரணமாக உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், காற்று மாசுபாடு காரணமாக உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த உயிரிழப்பு வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மற்றும் சீனா நாடுகளில் தான் அதிகமாக நிகழ்கிறது என்றும் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, ''காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது'' என அமெரிக்க அறிவியல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே, ''உலக அளவில் இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கான காரணிகளில் 4-வது முக்கிய பிரச்னையாக காற்று மாசுபாடு உள்ளது'' என கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை பேராசிரியர் மிச்செல் பிராயர் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ