Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போப் இரண்டாம் ஜான்பால் பிரம்மச்சாரியா? - இது பி.பி.சி கிளப்பும் சர்ச்சை

றைந்த போப் இரண்டாம் ஜான் பால், திருமணம் ஆன பெண் ஒருவருடன் பல ஆண்டுகள் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. 

இது குறித்து அந்த பெண்ணுக்கு போப் இரண்டாம் ஜான்பால் எழுதிய 350க்கும் மேற்பட்ட கடிதங்களை ஆதாரங்களாக கொண்டு பி.பி.சி. இந்த செய்தியை பதிவு செய்துள்ளது.

போலந்து நாட்டைச் சேர்ந்த தத்துவ மேதையும் எழுத்தாளருமான அனா தெரெஸா திம்யென் யட்சிகாவை,' கடவுள் தந்த பரிசு' என ஒரு கடிதத்தில் போப் இரண்டாம் ஜான் பால் குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் இடையே இருந்த உறவு, காதலர்களுக்கும், நண்பர்களுக்கும் இடைப்பட்டது எனவும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.

போலந்தின் தேசிய  நூலகத்தில்  அனா தெரெஸா திம்யென் யட்சிகாவுக்கு,  போப்பாண்டவர் ஜான் பால் எழுதிய கடிதங்கள் இன்றுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், போப்பாண்டவர் தனது பிரம்மச்சரியத்தை மீறியதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று பிபிசி தெரிவித்துள்ளது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close