Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறைந்த போப் இரண்டாம் ஜான்பால் மீது பி.பி.சி. அவதூறு கிளப்பியதா?

போப் ஜான் பால் ஒரு பெண்ணுடன் நட்புடன் இருந்ததாக வெளியானத் தகவல் காதலர்தின ஜோக் என போலந்து நூலகம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த பெண்ணுக்கு போப் இரண்டாம் ஜான்பால் எழுதிய 350க்கும் மேற்பட்ட கடிதங்களை ஆதாரங்களாக கொண்டு பி.பி.சி. இந்த ஒரு டாகுமெண்ட்ரியை ஒளிபரப்பியது. போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள தேசிய  நூலகத்தில் கடந்த 1973 முதல் இவர் இறப்பதக்கு முன் அதாவது 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை எழுதப்பட்ட 350க்கும் மேற்பட்ட கடிதங்களை கொண்டு இந்த டாகுமென்ட்ரி படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியிருந்தது.

போலந்து நாட்டைச் சேர்ந்த தத்துவ மேதையும் எழுத்தாளருமான அனா தெரெஸா திம்யென் யட்சிகாவை,' கடவுள் தந்த பரிசு' என ஒரு கடிதத்தில் போப் இரண்டாம் ஜான் பால் குறிப்பிட்டுள்ளதாகவும் இருவருக்கும் இடையே இருந்த உறவு, காதலர்களுக்கும், நண்பர்களுக்கும் இடைப்பட்டது எனவும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.

போலந்தின் தேசிய  நூலகத்தில்  அனா தெரெஸா திம்யென் யட்சிகாவுக்கு,  போப்பாண்டவர் ஜான் பால் எழுதிய கடிதங்கள் இன்றுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், போப்பாண்டவர் தனது பிரம்மச்சரியத்தை மீறியதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பிபிசி அந்த டாகுமெண்ட்ரியில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த செய்திக்கு போலந்து நாட்டு தேசிய நூலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நூலகத்தின் இயக்குநர் தாமஸ் மகோஸ்கி , ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் இரு கடிதங்களை காட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த கடிதங்களில் அந்த பெண்ணுக்கும் அவரது கணவர் மற்றும் 3 குழந்தைகளுக்கும் போப் ஆசி  தெரிவித்துள்ளார்.

அது போல் வெளியிட்டுள்ள படங்களும் வெவ்வேறு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வாக நண்பர்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட படங்களை இணைத்து பி.பி.சி. இந்த செய்தியை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதுபோல் அந்த பெண்ணை கடவுளின் பரிசு என்று கூறியதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் தனக்கு பிடித்தவர்களிடம் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.  போப் ஜான்பால் பெண்களை தொடுவதை தவறாக கருதவில்லை. பெண்களது கரங்களை  பிடித்து கொண்டு பேசும் வழக்கம் உடையவர் என்றும்  கன்னத்தை அன்புடன் வருடிக் கொடுப்பவர் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

போப் இரண்டாம் ஜான்பால் போலந்து நாட்டில் பிறந்தவர்.  கரோல் ஜோசஃப் உஜ்ஜாலா என்ற இயற் பெயர் கொண்டவர் .கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை போப் ஆண்டவராக இருந்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close