Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்துத் திருமணங்களைப் பதிவு செய்யப் போகும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானில், இந்துக்களே இரண்டாவது பெரிய சிறுபான்மையினர். இவர்களின் மக்கள் தொகை 33 லட்சத்தைத் தொடும்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருக்கும் சிந்தி மக்கள் கூட்டத்தின் "இந்துத் திருமண மசோதா 2015" நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பாகிஸ்தான் நாட்டிலேயே இந்து, ஜெயின் மற்றும் சீக்கியத் திருமணங்களை முறைப்படுத்தி, பதிவேட்டிற்குள் கொண்டு வரப்போகும் முதல் மாகாணம் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் இந்துக் கழகத்தின் பொதுச் செயலாளர் தீபக் குமார் பாக்சன்தனி கூறுகையில், "நீண்டகால தேவையாக இருந்த இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது. இத்தனை நாட்கள்  சரிவர பதிவு செய்யப் படாமல்  பல்வேறு இந்துத் திருமணங்கள் நடந்துள்ளது" என்று கூறினார்.

இந்த மசோதாவை முன் நிறுத்திய சட்ட அமைச்சர் நிசார் அஹ்மத் குரோ, "பாகிஸ்தான் உருவானதில் இருந்து இப்படிப்பட்ட ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இதுவே முதல் தடவை ஆகும். இந்த முடிவு இந்துத் திருமணங்கள் முறைப்படி எழுதப்படவே!" என்றார்.

சில இந்துத் தலைவர்கள், "இந்தத் திட்டம், விதவைப் பெண்களின் திருமண உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாக அமையும். அதாவது, துணை ஊதியம்,கணவனின் சொத்தில் ஒரு பங்கு, திருமண வயது 18 எனப் பல விதிகளை தன்னகத்தே அடக்கியது. இது, இந்து சமூகத்தில் உள்ள பலப் பிரச்சனைகளில் ஒன்றான பழைய நடைமுறைகள், குழந்தைத் திருமணம் என பலவற்றிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அமையும்" என்றும் கூறுகிறார்கள்.

சட்டப்பூர்வமான திருமணச் சான்றிதழ் இல்லாததால், இத்தனை நாள், இந்துத் தம்பதியினர்களால், வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா, சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அதில், திருமணம் செய்து கொள்பவர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், இருவரும் தங்களது பரஸ்பர விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும், 2 பேராவது சாட்சிக்கு திருமண வேளையில் இருக்க வேண்டும்" என்பதே. இது நம்மூர் விதிமுறைகளில் இருந்து சிறிதும் மாற்றம் இல்லாத ஒன்று.

மேலும் இந்தத் திட்டத்தை விதி தவறாமல் செயல்படுத்த, பதிவு செய்யத் தவறும் தம்பதியினருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இத்தனை நாள், அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்த அலட்சியத்தால், வங்கிகளில் கணக்கு வைக்க முடியாத சிக்கல், விசா மறுப்பு மற்றும் அரசு சான்றிதழ்கள் பெறுவதில் குழப்பங்கள் ஆகிய பல பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும். 

மு.சித்தார்த் (மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close