Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவுடனான வர்த்தகத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள்... ரணில்!

கொழும்பு: இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ள இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து தெற்கு அம்பணத்தோட்டம் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறும்போது, ''இந்தியாவுடன் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (ஈ.டி.சி.ஏ.) ஏற்படுத்திக்கொள்ள இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

அரசின் மேற்கண்ட திட்டத்துக்கு இலங்கை வர்த்தகச் சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த ஒப்பந்தமானது, இலங்கையின் பொருளாதாரத்தை அன்னிய நாட்டுக்கு கொடுக்கும் முயற்சியாகும் என்றும் அவை குற்றம்சாட்டுகின்றன.

மேலும், தொழில்நுட்ப ரீதியிலான ஒப்பந்தத்தின் மூலம், வேலைவாய்ப்புக்காக இலங்கைக்கு இந்தியர்கள் அதிக அளவில் வருகை தருவர். இதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் இலங்கை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்ற தவறான கருத்தையும் அவர்கள் கூறி வருகின்றன.

இந்தியாவுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இதைத் தடுக்க நினைக்கும் அனைவரும் தேசத் துரோகிகளாவர். இந்தியாவைப் போன்று பெரிய சந்தையில்லாத சீனா, இலங்கையில் முதலீடு செய்வது பயனற்றதாகும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ