Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமானத்தில் சிறுநீர் கழித்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

லண்டன்: விமானத்தில் சிறுநீர் கழித்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகருக்கு கடந்த மாதம் 19-ம் தேதி ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில், ஜினு ஆபிரகாம் (39) என்பவர் தனது 10 வயது மகனுடன் பயணம் செய்தார்.

அப்போது, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஜினு ஆபிரகாம் திடீரென எழுந்து விமானத்தின் மையப்பகுதிக்கு சென்று சிறுநீர் கழித்தார். இதனை கண்டதும் சக பயணிகளும், விமான ஊழியர்களும் முகம் சுளித்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை பிடித்து விமான ஊழியர்கள் விசாரித்ததில், அவர் மது அருந்திவிட்டு போதையில் இத்தகைய செயலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, விமான ஊழியர்கள் அவரது கைகளை கட்டி இருக்கையில் அமர வைத்திருக்கின்றனர்.

அதன்பின் விமானம் பிர்மிங்காமில் தரையிறங்கியதும், புகார் அளிக்கப்பட்டு போலீசார் ஜினு ஆபிரகாமை கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பான வழக்கு பிர்மிங்காம் நகர நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த பிர்மிங்காம் நகர நீதிமன்ற நீதிபதி, அவருக்கு 1,000 பவுண்டு (சுமார் ரூ.1 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ