Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒபாமாவுடன் ஆனந்த நடனமாடிய 106 வயது மூதாட்டி! (வீடியோ)

வாஷிங்டன்: 'அமெரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியை சந்தித்து விட்டேன்’ என்று ஒபாமாவுடன் 106 வயது மூதாட்டி ஆனந்த நடனமாடினார்.

அமெரிக்காவை வடிவமைத்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி மாதம், கருப்பின வரலாற்று மாதமாக அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தெற்கு கரோலினாவை சேர்ந்த 106 வயது கருப்பின மூதாட்டியான விர்ஜினியா மெக்லாரின், ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.

அப்போது, ஒபாமாவையும் அவரது மனைவியையும் சந்தித்ததும் விர்ஜினியா மெக்லாரினால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. உடனே, ‘அமெரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதியை சந்தித்து விட்டேன்’ என்று கூறி உற்சாகமடைந்த அவர், ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சிலியின் கைகளை பிடித்துக் கொண்டு நடனமே ஆடி விட்டார். 

விர்ஜினியா மெக்லாரின் மகிழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா தம்பதியும், அவருடன் சில நடன அசைவுகளை ஆடினர். இது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close