Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து, வணிக வளாகம் கட்ட முயற்சி!

பெஷாவர்: பாகிஸ்தானில் பாரம்பரியமிக்க இந்து கோவிலை இடித்து விட்டு, அதில் வணிக வளாகம் கட்ட முயற்சிப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாகிஸ்தானின், பெஷாவர் அருகேயுள்ள கரிம்புராவில் மிகவும் பழமையான பாரம்பரமியம் மிக்க இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இடித்து விட்டு, வணிக வளாகம் கட்ட முயற்சிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''பாரம்பரியம் மிக்க இந்து கோவிலை இடித்து விட்டு, அதில் வணிக வளாகம் கட்ட சிலர் முயற்சித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பே கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது. இது கிரிமினல் குற்றமாகும்.

ஆனால், அவர்கள் மீது அரசுத்துறையினர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதேபோல், முஸ்லிம் அல்லாத பிற மதத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் பாகிஸ்தான் அரசு அமைப்பான ஈ.டி.பி.பி.யும் இதை கண்டுகொள்வில்லை'' என்றனர்.

இந்து கோவில் இடிக்கப்படுவதற்கு பாகிஸ்தானில் உள்ள சிவில் சமூகம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ''நில மாஃபியாக்கள், கீழ் நிலை அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, மதிப்புமிக்க பாரம்பரிய அடையாளங்களை சிதைப்பது வேதனை அளிக்கிறது'' என அந்த அமைப்பு கூறியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ