Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விபசாரத்துக்கு முற்றுப்புள்ளி: சிவப்பு விளக்கு பகுதிகளை மூட இந்தோனேசியா முடிவு!

ஜகர்தா: உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டில்,  விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அந்நாட்டு  அரசு முடிவு செய்துள்ளது.

தெற்காசியாவின் மிகப்பெரிய விபசார மையமாக விளங்கி வந்த இந்தோனேசிய நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயா நகரில் இருந்த அனைத்து விபசார விடுதிகளும், கடந்த 2014-ம் ஆண்டு முழுமையாக மூடப்பட்டுவிட்டன. அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து இதுவரை 68 சிகப்பு விளக்குப் பகுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தலைநகர் ஜகர்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து விபசார விடுதிகளையும் வெளியேற்றுமாறு ஜகர்தா நகர கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அங்குள்ள விடுதிகளை காலிசெய்து அதில் இருக்கும் பெண்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி உள்ளது.

இது குறித்து இந்தோனேசிய சமூகநலத்துறை அமைச்சர் கோஃபிபா இந்தர் பரவான்ஸா கூறும்போது, ''இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடரும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் மேலும் 100 சிகப்பு விளக்குப் பகுதிகள் காலி செய்யப்படும். 2019-ம் ஆண்டுக்குள் விபசாரமற்ற நாடாக இந்தோனேசியாவை அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ