Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக் வாசிகளுக்கு புதிய வசதி: ரீ-ஆக்சன் பட்டன்ஸ் அறிமுகம்!

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,தனது உறுப்பினர்களைக் கவர லைக் பண்ண பிடிக்காத போஸ்ட்களுக்கு ரீ-ஆக்சன்  பட்டன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.


உலக அளவில், பல மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு முன்னணி சமூக வலைத்தளமாக உள்ளது   ஃபேஸ்புக். இதன் உறுப்பினர்கள் தங்களின் நட்பு வட்டத்தில் உள்ள போஸ்ட்களுக்கு லைக் போடும் கமெண்ட் போட்டும் பழகியுள்ள ஃபேஸ்புக் வாசிகள் மத்தியில் ,dislike பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட  நாட்களாக இருந்தது.

தற்போது இந்தக் கோரிக்கை ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஏற்கப்பட்டு கடந்த 11 மணி நேரத்திற்கு முன்பு  ரீ-ஆக்சன்ஸ் பட்டன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக்.  இதில் 6 வகை ரீ-ஆக்சன்ஸ் பட்டன்ஸ்  உள்ளன.

பிடித்துள்ளது, மகிழ்ச்சி, வருத்தம், கோபம், ஆச்சரியம், அன்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படும் பட்டன்ஸ் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி லைக் மட்டும் போடணும் என்று அவசியமில்லை. பிடிக்காத கருத்து என்பதை வெளிப்படுத்தவும் செய்யலாம் ஃபேஸ்புக் உறுப்பினர்கள்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ