Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபர் தேர்தல் விறுவிறு: டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தேர்வு!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய நெவாடா மாகாணத்தில் நடந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

நியூ ஹம்ப்ஷயர், தெற்கு கரோலினா ஆகிய மாகாணங்களைத் தொடர்ந்து நெவாடாவிலும் அவர் வெற்றி பெற்றுள்ளதன் மூலம்‌ அதிகாரப்பூர்வ வேட்பாளராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

நெவாடாவில் நடந்த தேர்தலில் டிரம்பிற்கு 46 சதவீத வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக வந்த மார்கோ ரூபியோவிற்கு 23 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ