Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரணத்துக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் உயிரை காக்க போராடும் மாணவி!

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழும் நிலையில் உள்ள இலங்கை மாணவி ஒருவர், தனது உயிரை காப்பாற்ற (குருத்தணு) Stem cell தானம் செய்பவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வோல்தம்ஸ்டோ (Walthamstow) பகுதியை சேர்ந்தவர் வித்யா அல்போன்ஸ். இலங்கையை சேர்ந்த இவர்,  அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கண் தொடர்பாக படித்து வருகிறார்.

காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரத்தத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர், லூக்கிமியா என்னும் ரத்த புற்றுநோயால் வித்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக உள்ளதால் ஏற்படும் இந்நோய்,  ரத்த அணுக்கள் உருவாகும் இடத்தில் ஏற்படுவதாகும். மேலும் சில மாதங்களில் அவர் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வித்யா அதிர்ச்சியடைந்துள்ளார்.

சில வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா,  மேல் சிகிச்சைக்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக குருத்தணு மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது சகோதரரின் குருத்தணுவை மருத்துவர்கள் சோதித்ததில் 50 சதவீதம் மட்டுமே ஒத்துப்போனது.

எனவே அவருக்கு குருத்தணு தானம் பெறுவதற்காக,  குருத்தணு தானம் தொடர்பான விழிப்புணர்வை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வித்யா கூறுகையில், "ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எனக்கு ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். எனக்கு நம்பிக்கையாக உள்ளது. இந்த விழிப்புணர்வு மூலம் எனக்கு நன்மை ஏற்படவில்லை என்றாலும் கண்டிப்பாக யாருக்காவது நன்மை ஏற்படும்" என்று  தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ