Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிரியாவில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது: மக்கள் நிம்மதி!

டமாஸ்கஸ்: கடந்த 5 ஆண்டுகளாக உலகைக் கவலைக்கு ஆளாக்கிய சிரியா நாட்டின் உள்நாட்டு போர் தற்போது நிறுத்தப்பட்டு அமைதி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உண்டான போர் நிறுத்த சர்வதேச உடன்பாடு நேற்று(சனி) முதல் நடைமுறைக்கு வந்தது.
 
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் குண்டு வீச்சு வெடிச்சத்தம்,துப்பாக்கி  ஓசைகள் இல்லாமல் இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பயங்கர சண்டை நடந்து வந்த  அலெப்போ நகரிலும் தற்போது அமைதி நிலவுகிறது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ்., அல்-காய்தாவின் பிரிவான அல்-நுஸ்ரா ஆகிய பயங்கரவாதக் குழுக்கள் மீது தாக்குதல் தொடரும் என்று அமெரிக்காவும் ரஷியாவும் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.

கடந்த 2011 ம் ஆண்டு முதல், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களும், பிற ஆயுதக் குழுக்களும் அதிபர் பஷார் அல்-அஸாதுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில் சிக்கி லட்சக்கணக்கானோர் சிரியாவைவிட்டு வெளியேறி அகதிகளாக ஐரோப்பாவில் புகலிடம் தேடி சென்றுள்ளனர்.

மேற்கத்திய நாடுகள், சிரியா,ரஷ்யா போன்ற நாடுகள் ஒப்புக்கொண்டபடி போர் நிறுத்தம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. சனி நள்ளிரவு இரு தரப்பினரும் தங்களின் தாக்குதலை நிறுத்தினர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை அவரும் மார்ச் 7 ம் தேதி நடைபெறும் என்று சிரியாவுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் ஸ்டெஃபான் டிமிஸ்டூரா கூறியுள்ளார்.போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தாலும் சிரியாவில் இயல்பு வாழ்க்கை திரும்ப நெடு நாட்கள் ஆகலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close