Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவிஸ்சில் தஞ்சமடையும் அகதிகளுக்கு எதிரான வாக்கெடுப்பு தோல்வி!

சுவிஸ்சில் தஞ்சமடையும் அகதிகளுக்கு எதிரான வாக்கெடுப்பு தோல்வி அடைந்து உள்ளது.

80 லட்சம் மக்கள் தொகை கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில், 20 லட்சம் பேர் வெளிநாட்டினர். இதில் பல லட்சம் பேர் அந்நாட்டின் குடியுரிமை பெறாத அகதிகள். அதில், ஈழத்தமிழர்கள் மட்டும் 60 ஆயிரம் பேர். 25 ஆயிரம் பேர் மட்டுமே அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள்.

சுற்றி உள்ள நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்கள் காரணமாக சுவிட்சர்லாந்தில் அகதிகள் அதிகளவில் உருவாகி வருகின்றனர். அவர்கள் ஐரோப்பாவை நோக்கியே தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரவேண்டிய நிலைக்கு அந்நாடுகள் ஆளாக்கப்படும் நிலையில், குடியுரிமை பெறாத அகதிகள் சிறு குற்றம் புரிந்தாலும்கூட அவர்களை நாடு கடத்தும் ஒரு பொது வாக்கெடுப்பை பிப்ரவரி 28-ம் தேதி நடத்த அந்நாட்டின் ஆளும் வலது சாரி கட்சியான மக்கள் கட்சி ஏற்பாடு செய்து இருந்தது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், (59 சதவீதம் பேர்) பெரும்பான்மையானோர் வாக்கெடுப்புக்கு "நோ" என்று வாக்களித்து உள்ளனர். இதையடுத்து, ஆளும் கட்சி கொண்டு வந்த பொது வாக்கெடுப்பு தோல்வியை தழுவி உள்ளது. சுவிஸ் நாட்டில் இப்படிப்பட்ட பொது வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் அது சட்டமாகிவிடும்.

அந்த வகையில், இது சட்டமாகாமல் இருக்க வாக்களித்து உள்ளனர் சுவிஸ் மக்கள். மேலும், இது தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்கிறார் சுவிஸ் நாட்டில் வசிக்கும் அந்நாட்டின் ஓல்டேன் மாநகராட்சி உறுப்பினரும், வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரதிநிதியுமான ஸ்ரீ.ராசமாணிக்கம்.

- விஷ்வா விஸ்வநாத்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ