Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணியில் சேர்ந்த முதல் நாளில் பெண் போலீஸ் அதிகாரிக்கு நடந்த சோகம்!

போலீஸ் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

வெர்ஜினியா மாகாணத்தில்,  ஆஷ்லி குயின்டன் என்ற 29 வயதான பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று போலீஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்த அன்று மாலை காவல் துறைக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
 

கடமையை செய்ய முதன் முதலாக வாய்ப்பு கிடைத்துள்ளது என எண்ணிய அவரும், அவருடன் 2 போலீஸ் அதிகாரிகளும் அழைப்பு வந்த உட்பிரிஜ் என்ற நகருக்கு விரைந்து சென்றுள்ளனர். நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி ஏந்தியவாறு அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்துள்ளார்.

முன்னதாக, அவருடைய மனைவியை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. அந்த நபரிடம் துப்பாக்கியை கீழே போடுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை. இந்த சூழ்நிலையில் அவரை பிடிக்க,  பெண் அதிகாரியும் மற்ற இரண்டு காவலர்களும் துப்பாக்கி ஏந்திய நபருக்கு அருகில் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் பெண் போலீஸ் அதிகாரி அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

மற்ற இருவருக்கும் குண்டு காயம் பட்டுள்ளதால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலீஸ் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெண் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ