Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெர்மனியில் 1.30 லட்சம் அகதிகளை காணவில்லை: அரசின் அதிர்ச்சி தகவலால் பரபரப்பு! (வீடியோ)

ஜெர்மனி நாட்டில் கடந்தாண்டு குடியேற வந்த சுமார் 1,30,000 அகதிகளை காணவில்லை என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், "ஜெர்மனிக்கு குடியேற வந்த புலம்பெயர்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட அரசு மையத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள். ஆனால், இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1,30,000 பேர் அரசுக்கு தெரியாமல் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை பெறப்படவில்லை.

ஒருவேளை, காணாமல் போனவர்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு அல்லது ஜெர்மனி நாட்டிலேயே அரசுக்கு தெரியாமல் மறைந்து வசித்து வரலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஜெர்மனியில்,  2015-ம் ஆண்டு மட்டும் சுமார் 11 லட்சம் பேர் புகலிடம் கோரி வந்துள்ளனர். ஆனால், தற்போது காணாமல் போனவர்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 13 சதவிகிதமாக இருக்கிறது.

புலம் பெயர்ந்தவர்கள் காணாமல் போவதை தடுக்கும் விதத்தில்,  சில புதிய திட்டங்களுக்கு நாடாளுமன்றம் கடந்த 25-ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டங்கள் மூலம், ஜெர்மனியில் தற்போது உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் எதிர்காலத்தில் வரும் நபர்களுக்கு புதுவிதமான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு,  அது அரசாங்கத்தின் குறிப்பில் பதியப்படும்.


அதே சமயம், ஜெர்மனியில் ஏற்கனவே உள்ள உறவினர்களை புலம்பெயர்ந்தவர்கள் சந்திக்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம்,  புலம்பெயர்ந்தவர்கள் காணாமல் போவதை தடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ