Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தோழி வீட்டிற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தனது தோழிகளுடன் மது விருந்திற்கு சென்ற பெண்ணின் கன்னத்தை அவருடன் பணியாற்றும் பெண்மணி ஒருவர் கடித்து எடுத்துள்ளார். இந்த கொடூர சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது.
 

இங்கிலாந்தை சேர்ந்த கேட் நீல்டு என்பவர் சவுத்போர்ட் நகரில் உள்ள தனது தோழியின் வீட்டில் நடைபெற்ற மது விருந்திற்கு சென்றுள்ளார். அந்த விருந்தில் ஒன்று சேர்ந்து கலந்துகொண்ட தோழிகள் அனைவரும் நன்றாக குடித்து அந்த விருந்தினை உற்சாகமாக கொண்டியுள்ளனர். அதில் ஒரு பெண் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு உச்சகட்ட கோபத்திற்கு சென்றுள்ளார்.

இதன் விளைவாக, கேட்டின் கன்னத்தினை கடித்ததில், சதை தனியாக வந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேட்டினை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கையில் இருந்து சிறுதுண்டு சதையை வெட்டி எடுத்து அவரது கன்னத்தில் வைத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இருப்பினும் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இது திட்டமிட்ட தாக்குதல் என கேட்டின் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், அப்பெண்ணை தற்போது வரை கைது செய்யவில்லை. விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close