Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்ற தந்தை!

லாகூர்: பாகிஸ்தானில், வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்று கவுரவக் கொலை செய்து உள்ளார் ஒரு கல்நெஞ்சம் படைத்த தந்தை.

பாகிஸ்தானில் கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் அங்கு 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கவுரவக் கொலை செய்யப்படுகின்றனர். கவுரவக் கொலையை மையப்படுத்தி ‘எ கேர்ள் இன் தி ரிவர்’ என்ற ஆவணப் படத்துக்கு நேற்று ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இந்தப் படத்தை பாகிஸ்தானை சேர்ந்த ஷர்மீன் ஒய்த் சினாய் என்ற பெண் தயாரித்து இருந்தார். இதை பாகிஸ்தானில் விழாவாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு ஒரு பெண் கவுரவக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் கோமல் பீபி (வயது 18). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றுவிட்டு வெகு நேரம் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதை, அவரது தந்தை தட்டிக் கேட்டு கண்டித்துள்ளார். மேலும், ஏன் இவ்வளவு தாமதமாக வீட்டிற்கு வந்தாய் என்று தாமதத்திற்கான காரணத்தை கேட்டிருக்கிறார். அதற்கு கோமல் பீபி கூறிய காரணத்தை தந்தை ஏற்க மறுத்துள்ளார்.

மேலும், தனது மகள் நடத்தையில் சந்தேகம் அடைந்த தந்தை, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து,  தனது துப்பாக்கியால் மகள் கோமல் பீபியை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டுள்ளார். உடலில் குண்டு பாய்ந்த கோமல் பீபி, அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் கோமல் பீபியின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். இதை தொடர்ந்து  கோமல் பீபி உடலை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து,  தப்பி ஓடிய கோமல் பீபி தந்தையை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close