Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜப்பானில் மூன்றில் ஒரு பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்

மிகவும் முன்னேறிய நாடாக கருதப்படும் ஜப்பானில்,  பணியிடங்களில் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக  ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரதமர் ஷின்ஷே அபேவின் உத்தரவையடுத்து, ஜப்பான் தொழிலாளர் மற்றும் சுகாதார அமைச்சகம் இந்த ஆய்வினை மேற்கொண்டது. ஜப்பான் பொருளாதாரம் தொடர்ந்து மந்தமடைந்து வருவதையடுத்து, படித்த பெண்களை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பயன்படுத்த ஷின்ஷோ அபே திட்டமிட்டுள்ளார். இதனால் பணியிடங்களில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை களையும் வகையில், இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக பணியில் இருக்கும் பெண்களிடமும்,  இதற்கு முன் அலுவலகங்களில் பணி புரிந்து வேலையை கைவிட்ட பெண்களிடமும் பல தரப்பட்ட கேள்விகள் அடங்கிய வினாத்ததாள்கள் அனுப்பப்பட்டன. இதற்கு 25 வயதில் இருந்து 44 வயதுக்குட்பட்ட 10 ஆயிரம் பெண்கள் பதில் அளித்துள்ளனர்.   கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 3 வார காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதன்படி,  ஜப்பானில் பணிக்கு செல்லும் 30 சதவீத பெண்கள்,  பாலியல் ரீதியான பிரச்னைகளை  எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உடன் பணி புரியும் ஆண்களே  தகாத இடங்களில் தொடுவதாக 40 சதவீத பெண்கள் கூறியுள்ளனர். 38 சதவீத பெண்கள், செக்ஸ் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். 

இன்னும் சில பெண்கள் பாலியல் உறவுக்கு தங்களை நேரடியாக அழைத்த ஆண்களும் உண்டும் என்றும்,  ஆனால் 63 சதவீத பெண்கள்,  பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் இருந்தாலும் சகித்துக் கொண்டு பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளனர். பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் 10ல் ஒரு சதவீதம் பேரே புகார் தர முன்வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான டொயாட்டோ, பானாசானிக், நிப்பான் ஏர்வேஸ் போன்ற 3600 நிறுவனங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஷின்ஷோ அபே முடிவு செய்துள்ளார்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையேயான பாலின இடைவெளியில்,  ஜப்பானுக்கு உலகளவில் 101வது இடம். 145 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில்,  சுரினாம் அசர்பைஜான் நாடுகளை விட ஜப்பான் பின்தங்கியுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே,  நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பெண்கள் முன் வரவேண்டுமென்று பேசுவார். ஆனால் பகுதி நேர வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  போதுமான சம்பளம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் ஜப்பானிய பெண்கள் முன் வைத்துள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ