Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கண்ணி வெடிகளுக்கு இலங்கையில் தடை!

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு போருக்கு பின் 7 ஆண்டுகள் கழித்து தற்போது கண்ணி வெடிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டு போர் முடிந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், கண்ணி வெடிகளுக்கு அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இடம் பெயர்ந்த குடிமக்களை மறு குடியமர்த்தலின் முக்கிய நடவடிக்கையாக இது எடுக்கப்படுகிறது எனவும் இலங்கை அரசு தெரிவித்து உள்ளது

இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. உள்நாட்டு போர் நடந்தபோது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தன. போருக்கு பின்னர் அவற்றை அகற்றும் பணியில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில், கண்ணிவெடிகளுக்கு தடை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக, அந்நாட்டு அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் கயந்தா கருணாதிலகே கொழும்பு நகரில்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், கண்ணிவெடிக்கு எதிராக ஒட்டவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த நடவடிக்கை,  போரினால் புலம் பெயர்ந்த மக்களை அவர்கள் பகுதியில் மீண்டும் குடியமர்த்துவதில் முக்கியமானதாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்