Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 இந்திய நர்சுகள் உள்பட 16 பேர் பலி!

ஏடென்: ஏமன் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்திய நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.

ஏமன் நாட்டில் உள்ள ஏடெனில் செயல்பட்டு வரும் ஒரு முதியோர் இல்லத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுற்றி வளைத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை சுட்டுக் கொன்றனர். பின்னர் அந்த இல்லத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த 4 இந்திய நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ