Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் பலி!

பெஷாவர்: பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள சர்சாடா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை வழக்கம் போல் அலுவல்கள் நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் அந்த நீதிமன்றத்துக்குள் நுழைய முயற்சி செய்திருக்கிறார். அங்கு நின்ற பாதுகாப்பு படையினரை அவரை மறித்து சோதனை செய்திருக்கின்றனர். அப்போது அவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டியிருந்தது தெரியவந்திருக்கிறது. அவரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தியபோது, திடீரென அந்த வெடிகுண்டுகளை மர்ம நபர் வெடிக்கச் செய்திருக்கிறார்.

இந்த தாக்குதலில் ஒரு போலீசார் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்த வந்த காவல்துறையினர், அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ