Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்னால் முடியவில்லை... ரத்த புற்றுநோயால் உயிருக்கு போராடும் வித்யாவின் நெகிழவைக்கும் நிமிடங்கள்! (வீடியோ)

தனக்கான உறுப்பு தானம் செய்யும் நண்பர்கள் விரைவில் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக, ரத்த புற்று நோயால் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் இலங்கை பெண் வித்யா அல்போன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிழக்கு லண்டன், வோல்தம்ஸ்ரோ (Walthamstow) பகுதியைச் சேர்ந்த 24 வயதான வித்யா அல்போன்ஸ், லூக்கேமியா என்னும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வித்யாவுக்கு உடனடியாக ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும்.

இதுவரை வழங்கியவர்களின் ஸ்டெம் செல்கள் பொருந்தாத நிலையில் அவரால் அடுத்த இரண்டு மாதங்களே உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வித்யாவின் இரத்த மாதிரிக்கு பொருந்தக்கூடிய ஸ்டெம் செல்லைத் தானம் கொடுக்கக்கூடியவர்கள் இங்கிலாந்தில் இருந்து 0303 303 0303 என்ற இலக்கத்திற்கும் வெளி நாட்டவர்கள் 0044 303 303 0303 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு பொருந்தக்கூடிய குருத்தணுவை அளிக்க விரும்புபவர்களை கண்டுபிடிப்பதில் மிகக் கடினமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது உயிரைக் காப்பாற்றக்கூடிய நபர்கள் அவரை தொடர்பு கொண்டு உதவ முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில், வித்யாவின் ஒவ்வொரு மணித்துளிகளும் நகர்ந்து செல்கின்றன.


வித்யாவுக்கு தானம் செய்ய விரும்புவோர் மேற்கு லண்டனில் உள்ள St Anselm's Catholic Church, The Green, Southall, UB2 4BE என்ற முகவரியில் அமைந்துள்ள நிலையத்தில் பரிசோதனையில் நடைபெறுகிறது.

இதனிடையே, தனக்கான உறுப்பு தானம் செய்யும் நண்பர்கள் விரைவில் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக, ரத்த புற்று நோயால் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் இலங்கை பெண் வித்யா அல்போன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ