Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒன் டே ஐ வில்....கூகுள் வெளியிட்ட மகளிர் தின ஸ்பெஷல் டூடுல் அசத்தல் வீடியோ!

மகளிர் தினமான நேற்று உலக நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த மகளிரையும் பெருமைப்படுத்தும் வகையில்  கூகுள் வெளியிட்ட மகளிர் தின சிறப்பு கூகுள் டூடுல் சிறப்பு வீடியோ இணைய ரசிகர்களை ரசிக்கவைத்தது.

'ஒன் டே ஐ வில்' என்ற தன்னம்பிக்கை மிளிரும் ஹேஸ்டேக்குடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ 1 நிமிடம் 23 வினாடி நேரம் ஓடுகிறது. கூகுளின் இந்த சிறப்பு வீடியோ தயாரிப்பிற்காக கூகுள் நிறுவனம் 13 நாடுகளை சேர்ந்த 337 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை தேர்வு செய்தது. அவர்களிடம் 'ஒருநாள் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்' (oneday i will) என்ற கேள்வியை முன்வைத்தது.

இந்த கேள்விக்கு பதிலாக எதிர்காலத்தில் தங்களின் லட்சியம், ஆசைகள், எதிர்பார்ப்புகள், தங்களின் பயணம் ஆகியவற்றை பேட்டியாக மட்டுமின்றி நடனம் மற்றும் பல விதங்களில் வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண்கள் வெளிப்படுத்தியிருப்பது வீடியோவின் சுவாரஷ்யத்தை கூட்டுகிறது.

இந்த வீடியோவில் இடம்பெறும் பெண்கள் உற்சாகமாக தங்கள் கருத்துக்களை சொல்லியும் நடனமாடியும் சாகசங்களை நிகழ்த்தியும் அசத்துகின்றனர். மகளிர் தினத்தன்று இந்த வீடியோவை யாராவது பார்க்காதவர்கள் இருக்கிறீர்களா...பரவாயில்லை பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்..

பாரிஸ், ஜகார்தா, ரியோடி ஜெனிரோ, மெக்ஸிகோ, மாஸ்கோ. பாங்காக், டோக்கியோ, புதுடெல்லி என அத்தனை அழகு நகரங்களிலும் இதற்காக பெண்களை சந்தித்து படம்பிடித்துள்ளது கூகுள்.

- எஸ்.கிருபாகரன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close