Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபோன் வாங்க பெற்ற குழந்தையை விற்ற தம்பதி!

ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக சீன தம்பதியர் ஒருவர் பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தையை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் வசித்து வரும் சியாவோ மேய் என்ற பெண் தனது குடியிருப்பு பகுதி அருகே பகுதி நேர வேலைகளைச் செய்து வருகிறார். குழந்தையின் தந்தை துவான் எப்போதும் இன்டர்நெட் கஃபேக்களில் நேரத்தை செலவிட்டு வருபவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமூகவலைத்தளம் QQ-வில் கொடுத்த விளம்பரத்தை அடுத்து ஒருவர் குழந்தையை வாங்க முன் வந்தார். அவர் 23,000 யுவான்கள் (இந்திய மதிப்பு ரூ.2,80,000) தொகையை இவரிடம் அளித்துள்ளார்.  இந்தத் தொகையைக் கொண்டு ஐபோன் மற்றும் மோட்டார் பைக் ஒன்றை வாங்க அவர் திட்டமிட்டிருந்தார்.
 

இந்த தம்பதிகள் இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு சந்தித்து காதல் வலையில் விழுந்தனர். இவர்கள் இருவருமே திருமண வயதை எட்டாத நிலையில் உறவு மலர்ந்ததில் சியாவோ மேய் கருத்தரித்துள்ளார். 19 வயதே ஆன இருவரும் தங்களுக்கு பிறந்துள்ள குழந்தையால் சுமைதான் அதிகமாகும் என்று இருவரும் முடிவெடுத்தனர்.

இதனையடுத்தே குழந்தையை இருவரும் விற்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. குழந்தையை விற்றவுடன் சியாவோ மேய் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர், இவரை கண்டு பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நடத்தப்பட்ட விசாரணையில் மேய் கூறுகையில், நானே தத்து எடுக்கப்பட்டவள்தான், எனது ஊரில் குழந்தைகளை வளர்க்க பிறரிடம் விடப்படுவதுண்டு. எனவே எனக்கு இது சட்ட விரோதம் என்று தெரியாது என்றார்.

இந்த விவாதங்களை ஏற்காத நீதிமன்றம் தாய்க்கு இரண்டரை ஆண்டுகளும், தந்தைக்கு 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு ஆன்லைன் மூலம் விற்கப்பட்டுள்ளனர்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ