Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மியான்மரில் மலர்ந்தது உண்மையான மக்களாட்சி!

மியான்மர் நாடு ராணுவ ஆட்சியில் இருந்து மீண்டு குடியரசுப் பாதைக்குத் திரும்புகிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் 'மக்களாட்சிக்கானத் தேசிய கூட்டமைப்பு' அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

மியான்மர் ராணுவ ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆங் சான் சூகியால் அதிபர் பதவிக்குப் போட்டி இட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன்பிறகே சூகியின் பிரதிநிதியாக ஹ்டின் க்யாவ் அதிபர் பதவிக்கான வேட்பாளராக முன்மொழியப்பட்டார். மொத்தம் உள்ள 652 வாக்குகளில் 360 வாக்குகள் பெற்று ஹ்டின் க்யாவ் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

அதிபராக ஆங் சான் சூகி இருக்க முடியாது என்றாலும், அதிகார மையமாக அவர்தான் இருப்பார். எழுபது வயதாகும் ஹ்டின் க்யாவ், சூகியின் மிகவும் நெருங்கிய நண்பராவார். சூகியின் தாயார் நினைவைப் போற்றும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையில் முக்கியப் பங்கு வகித்தவர். இவருடைய மனைவி சூ சூ ல்வின் தற்போது மியான்மர் பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close