Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடுதலைப்புலி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்? சிங்கள ஊடகம் பரபரப்புத் தகவல்!

கொழும்பு: முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது கொல்லப்பட்டதாக் கருதப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்றும், அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்கிறார் என்றும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடந்த போரின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் தமிழகத்தில் மறைந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 'குருடீ' என்ற பெயரில் தமிழகத்தில் பொட்டு அம்மான் மனைவியுடன் மறைந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

நந்திக்கடல் போரின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் அறிவித்த போதிலும், அவரது சடலம் மீட்கப்படவில்லை. பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளார் என்பது பற்றிய உறுதியான சாட்சியங்களை  இலங்கை அரசு,  இந்தியாவிற்கு வழங்கவில்லை.

ஆனால், பொட்டு அம்மான் இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக 2014-ம் ஆண்டில் கூட்டுப் படைகளின்  தளபதியாக பணியாற்றிய ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டு அம்மான் கொல்லப்பட்டார் எனவும், சடலத்தை மீட்கவில்லை எனவும் 2009-ம் ஆண்டில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். 2009-ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிப் போரில் பொட்டு அம்மான் உயிரிழந்தார் என இலங்கை ராணுவத்தரப்பு  தெரிவித்திருந்தனர். எனினும் அவரது சடலம் மீட்கப்படவில்லை.

இந்தத் தகவல்கள் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close