Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க களமிறங்கிய 62 வயது வீரர்! (வீடியோ)

4 போர்களில் பங்கேற்றுள்ள 62 வயது முதியவர் ஒருவர் தற்போது ஐந்தாவதாக, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்காக களமிறங்கியுள்ளார்.

அபு தக்சீன் (62) என்ற முதியவர் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதில் மிகவும் அனுபவமிகுந்தவர். இவர் இதுவரை, யோம் கிப்பூர் போர், ஈரான், ஈராக் போர், குவைத் படையெடுப்பு, கல்ஃப் போர் என நான்கு போர்களில் பங்கேற்றுள்ளார்.

தற்போது ஐந்தாவது ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்துவதற்காக, ஹாசத் அல் ஷாபி (Hashd Al-Shaabi) என்ற அமைப்பில் இணைந்துள்ளார். ஈராக்கில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த அமைப்பில் இணைந்த இந்த முதியவர், இதுவரை 173 ஐஎஸ் தீவிரவாதிகளை சுட்டுக்கொலை செய்துள்ளார்.

தற்போது, இந்த வீரர், எவ்வாறு குறிபார்த்து சுடுகிறார் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில், உயர்ரக துப்பாக்கியை தனது தோள்பட்டையில் வைத்து சுமந்து செல்லும் அவர், தொலைதூரத்தில் இருக்கும் நபரை பார்த்து குறிபார்த்து சுடுகிறார். அப்போது, அவரது குறி தவறுகையில் ஸ்வீட் என்ற வார்த்தையை முனுமுனுத்துக் கொள்கிறார்.

"நான் பதற்றம் அடையாமல் மிகவும் நிதானமாக இருக்கிறேன். என்னால் அவனை சுட முடியும்" என சொல்கிறார் அபு.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ