Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு!

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பிரிக்கும் பெரிங் கடல்பகுதியை ஒட்டியுள்ள மசாட்கா தீபகற்ப தீவுகளில் உள்ள நகரங்களில்,  சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள கமாண்டர் தீவுகளின் தென்மேற்கே,  146 மைல் தூரத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 40 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள், வீடுகள் குலுங்கின. ஆனாலும்,  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close