Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.எஸ். வீடியோவை காட்டி மாணவர்களை அதிர வைத்த ஆசிரியை!

.எஸ். தீவிரவாதிகளின் வீடியோ காட்சிகளை வைத்து மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் எடுத்துள்ளார். அமெரிக்காவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள பிராங்க்ஸ் அகாடமியில்,  மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு,  அலெக்சிஸ் நசரியோ என்ற 26 வயதுடைய ஆசிரியர் பாடம் எடுத்து வருகிறார். சம்பவத்தன்று ஊடகம் தொடர்பான வீடியோ ஒன்றை மாணவர்களுக்கு காண்பிக்கும் வகையில், அது  தொடர்பான காட்சிகளை அவர் இணையத்தில் தேடியுள்ளார்.
 

அப்போது ஓடவிட்ட காட்சி ஐ.எஸ். தீவிரவாதிகளின் வீடியோ என கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து தண்டனை வழங்கும் அந்த காட்சிகள் மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், வேண்டுமென்றே தாம் அதுபோன்ற காட்சிகளை மாணவர்களுக்கு காண்பிக்கவில்லை என்றும், தாம் தேடிய வீடியோவுக்கு பதிலாக ஐ.எஸ். அமைப்பினரின் வீடியோவானது தவறுதலாக காண்பிக்கப்பட்டது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியரை பள்ளியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இது பெரிய குற்றமல்ல என்றும்,  ஊடகம் தொடர்பாக கல்வி பயின்று வரும் மாணவர்களும் ஐ.எஸ். குறித்து தெரிந்துகொள்வது அவசியம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியருக்கு 300 டாலர் மட்டும் அபராதமாக விதித்துள்ளனர். ஆனால், அந்த பள்ளி நிர்வாகம் அவரது காரணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததை அடுத்து, மாற்று ஆசிரியராக அவர் பல்வேறு பள்ளிகளில் தற்போது பணி செய்து வருகிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ