Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒலிம்பிக்கில் அகதிகளுக்கு வாய்ப்பு!

யுஸ்ரா மர்த்தினியும் அவரது சகோதரி சாராவும் இஸ்தான்புல்லில் இருந்து கிரேக்க தீவு லாஸ்பாஸிற்கு அகதிகளாக தப்பித்து வந்தனர். ஏழு பேரை மட்டுமே சுமக்கும் வலிமை பெற்ற படகில்,  20 பேர் கடலில் தப்பி சென்றதால் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த இரு சகோதரிகளும் நீந்தி ஜெர்மனியை அடைந்தனர்.

இப்போது 2020ல் ரையோ டி ஜனேரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில், பல்வேறு நாட்டைச் சார்ந்த திறமை மிக்க அகதிகள் போட்டியிட ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் இம்முறை கலந்து கொள்ளவிருக்கும் பல்வேறு துறையைச் சார்ந்த 43 போட்டியார்களில்,  18 வயதே நிரம்பியுள்ள யுஸ்ராவும் போடியிட இருக்கிறார். இதற்கு முன் அகதிகளை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிப்பது இல்லை. காரணம் அவர்கள் எந்த நாட்டையும் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான். எனவே, இம்முறை International Olympic Committee எடுத்துள்ள முடிவில், அகதிகள் அனைவரும் ஒலிம்பிக் கொடியை உபயோகிப்பர்.



இது குறித்து மர்த்தினி கூறுகையில்," அனைத்து அகதிகளும் என்னைக் கண்டு பெருமைப்பட வேண்டும். தாய் நாடு சொந்தமில்லாத நிலையிலும், துன்பத்தில் துவண்டாலும் ஒரு மனிதன் வாழ்வில் சாதிக்க முடியும் என்பதுதான் உண்மை. அதை நான் உலகிற்கு காட்டுவேன்.

என் மனம் தாய்நாட்டை மிகவும் தேடுகிறது. என்றாவது ஒரு நாள் மீண்டும் செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

மர்த்தினியின் பயிற்சியாளர் Sven Spannekrebs அவரது திறமையைக் கண்டு மிகவும் அதிசயித்துப் போனார். ஒலிம்பிக்கில் போட்டியிட இன்னும் யுஸ்ரா நிறைய பயிற்சி பெற வேண்டும். யுஸ்ரா மிக வேகமாக படித்து விட்டாள். நான் நமது இலக்கு 2020 ஒலிம்பிக் என்று மட்டும்தான் கூறினேன. ஜுன் மாதம் ஏறத்தாழ 10 அகதிகளை போட்டியிட ஒலிம்பிக் குழு நிர்ணயிக்கும்" என்றார்.

மர்த்தினி கூறுகையில்," நான் இம்முறை தோற்றாலும் மீண்டும் முயற்சி செய்வேன். நான் சோகமாக இருந்தாலும் அதை வெளியே காண்பிக்காமல் முயற்சி செய்வேன். நமது கனவை நெருங்குவது கடினம்தான். முடியாத விஷயம் இல்லை." என்றார்.

வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும் தன் திறமையால் அனைத்தையும் வெல்லலாம் என்பதற்கு மர்த்தினி ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

-ந.ஆசிபா பாத்திமா பாவா

(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ