Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒபாமாவை ரால் கேஸ்ட்ரோ அவமதித்துவிட்டார்: டொனால்டு டிரம்ப் ட்வீட்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை கியூபா அதிபர் ரால் கேஸ்ட்ரோ விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்காதது அவமதிப்பு என்று டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமெரிக்காவின் அருகில் அமைந்துள்ள தீவு நாடான கியூபாவில்,  1959–ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு கம்யூனிஸ்டுகள் முடிவு கட்டினர். அந்நாட்டின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்றார். கியூபாவுக்கு முன்னாள் சோவியத் ரஷ்யா,  தனது முழுமையான ஆதரவை அளித்தது. இதற்கிடையே, கியூபாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. மேலும் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது.

இதன் காரணமாக அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்போர் நீடித்து வந்தது. இந்த நிலையில் உடல் நலம் குன்றிய பிடல் காஸ்ட்ரோ, கடந்த  2008–ம் ஆண்டு,  தனது சகோதரர் ரால் கேஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். ரால் கேஸ்ட்ரோ பொறுப்புக்கு வந்த பின் அமெரிக்காவின் மீதான கடுமை சற்று தணிந்தது. 2014–ம் ஆண்டு உலக நாடுகள் வியப்படையும் வகையில் ஒபாமாவும், ரால் கேஸ்ட்ரோவும் இருநாடுகளும் இயல்பான உறவை தொடர விரும்புவதாக அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா–கியூபா இடையே புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் விதமாக ஒபாமா, கியூபாவுக்கு பயணம் செல்ல இருப்பதாக அறிவித்தார். அதன்படி அவர் தனது மனைவி, மகள் என குடும்பத்தினருடன் 3 நாள் அரசு முறை பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் இருந்து கியூபா நாட்டுக்கு ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானம் மூலம் சென்றார். இதன் மூலம், 88 ஆண்டுகளுக்கு பின் கியூபாவுக்கு சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை ஒபாமா பெற்றார்.

ஒபாமா, அவரது மனைவி மிச்செல், மகள்கள் ஷாசா, மலியா, மிச்செலின் தாயாரான மரியன் ரோபின்சன் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் பயணித்த விமானம், கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்டின் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதும், ஒபாமாவை கியூபாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வந்து வரவேற்றார். மேலும், ஒபாமாவுக்கு கியூபா அரசு சார்பில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கியூபா மக்களும் தங்கள் பங்கிற்கு கியூபா-அமெரிக்க கொடிகளை கையில் ஏந்தியபடி ஒபாமாவுக்கு மகிழ்ச்சி பொங்க வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், நேற்று ஒபாமா பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''அமெரிக்க அதிபர் ஒபாமா ஹவானா விமான நிலையத்திற்கு வந்தபோது, கியூபா அதிபர் ரால் கேஸ்ட்ரோ வந்து வரவேற்காமல் இருந்தது, ஒபாமாவை அவமதித்தது போல் இருந்தது.

போப் பிரான்சிஸ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கியூபா நாட்டிற்கு சென்றபோது ரால் கேஸ்ட்ரோ நேரில் வந்து வரவேற்றார். ஆனால், ஒபாமாவை வரவேற்க ரால் கேஸ்ட்ரோ ஏன் நேரில் வரவில்லை? ஒபாமா மீது அவருக்கு மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது" என்று குற்றஞ்சாட்டி பதிவிட்டு உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close