Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அர்ஜென்டினாவில் ஒபாமா ஆடிய நடனம்: வைரல் வீடியோ!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மிச்சலுடன் அர்ஜென்டினா சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு பெண் நடன கலைஞருடன் டான்ஸ் ஆடி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மிச்சலுடன் சீர்த்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அர்ஜென்டினா சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு நேற்று இரவு அர்ஜெண்டினா அதிபர் விருந்து அளித்தார். அந்த விருந்து நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

விருந்து நிகழ்ச்சியின்போது, டங்கோ டான்ஸர்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீர் என ஒரு பெண் நடன கலைஞர், அதிபர் ஒபாமா அருகில் வந்து அவரை நடனமாட அழைத்தார்.

அதை ஏற்று ஒபாமாவும் அவருடன் சிறிது நேரம் நடனம் ஆடினார். அந்த நேரத்தில், ஒபாமாவின் மனைவி மிச்சலும் எழுந்து சென்று ஆண் நடன கலைஞருடன் நடமாட தொடங்கினார்.

பிரசல்ஸ் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தபோது கியூபாவில் பேஸ்பால் விளையாட்டை ஒபாமா ரசித்து பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி மேலும் விமர்சனத்துள்ளாகி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க குடியரசு கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் தகவலில், ''ஐ.எஸ். தீவிரவாதிகள் நமது நேச நாடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், ஒபாமாவோ நடனமாடிக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளது.

மேலும் இதேபோல் பல்வேறு தரப்பினரும் ஒபாமாவின் இந்த செயலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பிரல்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 அமெரிக்கர்களும் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலையடுத்து உடனடியாக நாடு திரும்பும்படி பல்வேறு தரப்பினரும் ஒபாமாவை கேட்டுக் கொண்டனர். ஆனாலும் அதனை ஒபாமா நிராகரித்துவிட்டு தனது பயணத்தை தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close