Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஈராக் கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி! (படங்கள்)

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு,  பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈராக்கின் பல இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வைத்துள்ளனர். அங்கு, ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அன்பர் மாகாணத்தில்,  ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குபேயிசா நகரத்தை அரசுப்படைகளும் சன்னி பழங்குடியின போராளிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்ய ரசூல் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள இஷ்கண்டேரியா நகரில் உள்ள ஒரு சிறிய கால்பந்து மைதானத்தில் நேற்று கால்பந்துப் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர மேயர் அகமது ஷாக்கர் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கூடி இருந்தவர்கள் மத்தியில், ஒருவர் தனது உடலில் இருந்த வெடி குண்டை வெடிக்க செய்துள்ளார்.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், சுமார் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும், அந்த பகுதியின் நகர மேயர் அகமது ஷாக்கர் உள்பட 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேயர் அகமது ஷாக்கர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு முதலில் யாரும் பொறுப்பேற்காத நிலையில், தாங்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close