Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஸ்சில் இருந்த மூதாட்டியை தரதரவென இழுத்து சென்ற கண்டக்டர்- கண்டுகொள்ளாத பயணிகள் (வீடியோ)

பேருந்தில் இருந்த மூதாட்டி ஒருவரை கண்டக்டர் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து வெளியேற்றிய சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது பேருந்தில் ஏறிய அந்த வயதான பெண்மணி,  தான் செல்ல வேண்டிய பகுதியை கூறி பயணச்சீட்டு கேட்டுள்ளார். ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை என தெரிய வந்ததும், அந்த பேருந்தின் நடத்துனர் அந்த மூதாட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருப்பினும் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என உறுதியாக தெரிவித்த நடத்துனர், பணம் இல்லை எனில் பேருந்தில் இருந்து வெளியேறும்படி கூறியுள்ளார். ஆனால், அந்த மூதாட்டி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நடத்துனர் அவரை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து தரதரவென இழுத்து வெளியேற்றியுள்ளார். அப்போது பேருந்து படிக்கட்டில் இருந்த கம்பியை பிடித்து வெளியேற மறுத்த அவரை அந்த நடத்துனர் எட்டித்தள்ளி நடுவழியில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.


 

இச்சம்பவத்தில் சக பயணிகள் எவரும் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, முதியவராக இருப்பினும் சட்டத்தை மதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

மேலும் சிலர், தள்ளாத வயதுடைய அந்த மூதாட்டிக்கு ஏன் சக பயணிகள் எவரும் உதவ முன்வரவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்